Trisangu

Friday, April 07, 2006

பலா மரம்

நெடு நெடுவென வளர்ந்து நின்றது!
காற்றில் இலை அசைத்து
கவிதைகள் பல சொன்னது!
மனம் நொந்த வேளைகளில்
நண்பனாய் இதமளித்தது!

காய்க்கவில்லை என்பதால்
பலா மரத்தை வெட்டாதே
என் அப்பா !

எனக்கு கூடத்தான்
வேலை கிடைக்கவில்லை!

Friday, February 17, 2006

ஞாபகத்தேய்வு











பாதி மறந்த
பாடலின் ஸ்ருதியாய்
உன் முகம் மட்டும் நினைவில்
வார்த்தைகள் மறந்து போய்..
எங்கிருக்கிறாய் நீ !!!

Sunday, February 05, 2006

கிட்ட வந்து நீ !!

கிட்ட வந்து நீ
கட்டிப் பிடித்தெனெக்கு
முத்தம் கொடுக்கையில்
முகம் சுளிக்கிறாயே மகளே !!
முள்ளாய் குத்துதோ உன் அப்பனின் தாடி !
இனிமேலும்
உன் பட்டுக் கன்னம் பாழ்படாமல் இருக்க
செய்து கொள்கிறேன் ஷேவ் !!

Saturday, January 21, 2006

என்ன செய்யப் போகிறாய் ??

என்ன செய்யப் போகிறாய் ??

எதற்க்கு த்ரிசங்கு என்ற இந்த பெயர் வைத்தேன்? அமெரிக்கா வாழ் இந்தியர் அனைவரும் சொல்வது போல் இந்த நாடு ஆரம்பத்தில்தான் சொர்க்கம். வந்த புதிதில் பார்க்கும் ஒவ்வொரு பொருளும், காட்சியும் ஒரு பரவசத்தையும், உற்சாகத்தையும் தந்தது. பிறகு நாள் செல்ல செல்ல வாழ்க்கையே ஒட்டமாகி போய் சுற்றி நடக்கும் எல்லாம் புளித்து போய், இது சொர்கமா இல்லை நரகமா என்னும் கேள்வி எழும்.

இது த்ரிசங்கு சொர்கம் என்று சிலர் சொல்வார்கள் ஆனால் எனக்கு என்னவோ இது த்ரிசங்கு நரகம் என தோணுகிறது.